விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பர்ட் பதவியேற்றுள்ளார். விளங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற தாரகை கத்பர்ட் சபாநாயகர் அப்பாவு அறையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.

சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நந்தினியை 40 ஆயிரத்து 174 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.