தமிழகத்தில் ஆயிரம் உரிமைகள் திட்டமானது வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அமலுக்கு வர இருக்கிறது. இதன் நிலையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் நடைமுறை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மகளிர் உரிமை தொகைக்கு 1 கோடியே 48 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு ஆக.19, 20ல் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதால், விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டும். இதனால், சுமார் ஒரு கோடி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சூழல் உள்ளது.

இதில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் குடும்பத் தலைவியினுடைய விபரங்கள் அனைத்துமே பூர்த்தி செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் விண்ணம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்று இல்லத்தரசின் செல்போனிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.  இந்நிலையில்,  விண்ணப்பங்களில் கொடுக்கப்பட்ட தகவல்கள் சரியானதா என்பதை சரிபார்க்க அதிகாரிகள் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.