
தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததில் 65 பேர் பலியான விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த இருதயராஜ், பழனிச்சாமி, சக்திவேல், குமார் மற்றும் அண்ணாதுரை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் அந்த உத்தரவின் படி இவர்கள் 5 பேரும் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.