கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி இதுவரை உயிரிழந்தவர்களின் 55 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 31, சேலம் மருத்துவமனையில் 17, விழுப்புரம் மருத்துவமனையில் 4, ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து 100க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தமிழகம்  முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.