வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.