வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் வலிமையான வெற்றி கூட்டணி அமையும். கொள்கை வேறு. கூட்டணி வேறு. கூட்டணிக்காக நாங்கள் யாரையும் நாடி செல்வது கிடையாது. எங்களை நாடிதான் மற்றவர்கள் வருவார்கள் என கூறியுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டிற்கு நிதியை தர மறுக்கும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். தேசிய கல்விக் கொள்கையை கடைப்பிடித்தால் தான் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்படும் என கூறுவது சரியல்ல. மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என நிர்பந்திப்பது சரியல்ல. தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை தான் கடைபிடிக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது என கூறியுள்ளார்.
