தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கு வருடங்கள் ஆகும் நிலையில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள நிலையில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது.

2025-26 நிதியாண்டில் ரூ.3.31 லட்சம் கோடியாக வருவாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் வருவாய் திருத்த மதிப்பீடுகளைவிட 12.81% அதிகம் ஆகும். வருவாய் பற்றாக்குறை 3.2 சதவிகிதத்தில் இருந்து 1.17 சதவிகிதமாக குறையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. செலவினங்களைப் பொறுத்தவரை 2025-26ம் நிதியாண்டில் ரூ.3.73 லட்சம் கோடியாக மதிப்பீடு. இது கடந்த நிதியாண்டின் செலவின திருத்த மதிப்பீடுகளை விட 9.65% வளர்ச்சி ஆகும் என நிதியமைச்சர்ர் கூறியுள்ளார்.