தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் வீடு தேடி சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் ‌ அதாவது மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மக்களை தேடி மருத்துவத் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இந்தியாவுக்கே முன்னோடி திட்டம் அகத்திகளும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதன்படி ஐநா சபையின் 2024 ஆம் ஆண்டுக்கான United nation indergency task force விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெருமைமிகு விருது கிடைத்ததற்காக அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட அவர்களுக்கு மருந்துகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.