
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை டெல்லிக்கு 2 நாள் அரசு முறை பயணமாக செல்ல இருக்கிறார். அவர் நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேச இருக்கிறார். அதாவது தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
அதன்படி மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி மற்றும் புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் ஸ்மக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வரும் நிதி போன்றவற்றை ஒதுக்குமாறு பிரதமரை வலியுறுத்திவுள்ளார். மேலும் இன்று மாலை சென்னையில் இருந்து கிளம்பும் முதல்வர் ஸ்டாலின் நாளை பிரதமரை சந்திக்கிறார்.