போக்குவரத்து துறை ஆணையம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, ஆட்டோ கட்டணம் உயர்வு – எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முடிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளது. ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது.

சில ஆட்டோ சங்கங்கள் வரும் பிப்.1-ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக போக்குவரத்து துறை கவனத்திற்கு வந்ததுள்ளது. நிர்ணய கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் வட்டார போக்குவரத்து அலுலவர்களிடம் புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.