பாமக கட்சியில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்து வரும் நிலையில் ராமதாஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணியை நீக்கினார். அன்புமணி வேண்டுமானால் தனியாக கட்சி தொடங்கி கொள்ளட்டும் என ராமதாஸ் கூறிய நிலையில், பாமக கட்சியின் நலனுக்காக அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டிய கட்டாயம் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

அதே நேரத்தில் அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இரண்டு முறை கடிதம் அனுப்பியும் அவர் பதில் அளிக்காததால் அவரை கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்திருந்தார். இதற்கிடையில் வழக்கறிஞர் கே பாலு அன்புமணியை தலைவராக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக நேற்று கூறியிருந்தார். இது பாமக வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ராமதாஸ் தன்னுடைய காரில் இருந்த கட்சிக்கொடியை மாற்றினார்.

இன்று தைலாபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில் தன்னுடைய காரில் இருந்தா பாமக கொடி மாற்றிவிட்டு வன்னியர் சங்க கொடியை ஏற்றினார். மேலும் வன்னியரிட ஒதுக்கீட்டுக்காக உயிர் நீத்த தியாகிகள் தினத்தை முன்னிட்டு கட்சியின் கொடியை ராமதாஸ் மாற்றியுள்ளதாக பாமகவினர் தெரிவித்துள்ளனர்.