பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் மைத்ரேயன். இவர் கட்சி பிளவுபட்டபோது ‌ அதிமுகவிலிருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்தார். அதன்பின் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அணியில் சேர்ந்த நிலையில் அவரை சில காரணங்களுக்காக கட்சி நிர்வாகம் நீக்கியது. இதைத்தொடர்ந்து பாஜகவில் சேர்ந்த அவர் செயற்குழு உறுப்பினரானார். கடந்த 2023 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்த அவருக்கு போதிய முக்கியத்துவம் கட்சியில் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியில் இருந்த மைத்ரேயன் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார். மேலும் தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்ளுமாறு கடிதம் கொடுத்த நிலையில் அவருடைய கடிதத்தை பரிசீலனை செய்த அதிமுக அவரை மீண்டும் இணைத்துள்ளது.