சென்னையில் ஜெகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று எம்பி கே நகர் பகுதியில் இருந்து கோயம்பேடு செல்லும் பேருந்தில் பணியில் இருந்தார். அந்த சமயத்தில் குடிபோதையில் இருந்த கோவிந்தன் என்பவர் பேருந்தில் ஏறினார். அவருக்கும் ஜெகனுக்கும் டிக்கெட் எடுப்பதில் திடீரென தகராறு ஏற்பட்டது.

இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரத்தில் டிக்கெட் கொடுக்கும் அந்த இயந்திரத்தை வைத்து கோவிந்தன் தலையில் ஜெகன் அடித்துள்ளார். இதனால் அவர் உயிரிழந்தார்.  பணியின்போது உயிரிழந்த அரசுப்பேருந்து நடத்துநர் குடும்பத்துக்கு 10 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் நடத்துநர் ஜெகன் குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.