
நேபாள நாட்டில் தற்போது கடுமையான கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 66 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த நாட்டில் 3300 பாதுகாப்பு படை வீரர்கள் அடங்கிய குழுக்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் 79 பேரை காணவில்லை. இந்த கனமழையால் 200க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியது. மேலும் இதனால் 66 பேர் வரை உயிரிழந்து உள்ள நிலையில் தொடர்ந்து மீடபு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. அதோடு இன்னும் பலரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது.