
சமீப காலமாக நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மேற்கு ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய 50க்கும் மேற்பட்டோர் அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதனால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிர்ச்சியில் உள்ளார்.