நாமக்கல் அருகே பவாரியா கொள்ளைக் கும்பல் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் மூன்று ஏடிஎம்களில் ரூ. 66 லட்சத்தை கொள்ளையடித்து, தமிழகம் வழியாக தப்பி சென்ற இந்த கும்பல், நாமக்கல் மாவட்டத்தில் போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டனர். ராஜஸ்தான் பதிவெண்ணுடன் வந்த கண்டெய்னர் லாரியில் ஆயுதங்கள், பணம், மற்றும் சொகுசு கார்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. போலீஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒரு கொள்ளையன் உயிரிழந்தார்.

இந்த கும்பல் பவாரியா கொள்ளையர்கள் என்றும், வட இந்தியாவில் இருந்து தென்னிந்திய மாநிலங்களுக்கு வந்து பல்வேறு கொள்ளைகளை நடத்தி தப்பியோடுவதாக சந்தேகிக்கப்படுகிறது. கேரள மாநிலத்தில் திருச்சூரில் ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு, கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தப்ப முயன்ற இந்த கும்பல், நாமக்கல் மாவட்ட போலீசாரால் முற்றுகையிட்டு கைது செய்யப்பட்டது.

போலீசாரின் நடவடிக்கையில், காயமடைந்த போலீஸார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏழு பேர் கொண்ட இந்த கொள்ளைக் கும்பல், பவாரியா கொள்ளையர்களாக இருக்கக் கூடுமென விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் பவாரியா கொள்ளை கும்பல் என்ற சந்தேகப்பட்ட நிலையில் தற்போது மேவாட் கொள்ளை கும்பல் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் இதுவரை 15-க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சினிமா பாலில் நடந்த ஜசேங் சம்பவத்தில் போலீஸ் நடத்திய என்கவுண்டரில் வாகனத்தை ஓட்டிய ஒரு கொள்ளையன் கொல்லப்பட்ட நிலையில் மற்றவர்களை கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏடிஎம் மிஷின்களை குறி வைத்து கொள்ளை அடிக்கும் மேவாட் கும்பலை சேர்ந்தவர்கள் ஆவர்.