
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டை சிறப்பாக கொண்டாடும் வகையில், நவம்பர் 26-ஆம் தேதி காலை 11 மணியளவில் அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவன அலுவலகங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும்
பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிப்பதுடன் பல்வேறு போட்டிகளை நடத்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.