தமிழகத்தில் தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் தொடர்பாக சமீபத்தில் அனைத்து மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட கூட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. தொகுதி மறு சீரமைப்பு நடந்தால் தென் மாநிலங்களில் தொகுதிகள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் வட மாநிலங்களில் தொகுதிகள் கூடும் என்று கூறப்படுகிறது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தொகுதி மறு சீரமைப்பு பற்றி இன்னும் 30 வருடங்களுக்கு எந்த ஒரு முடிவும் எடுக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் வருகிற 6-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிய இருக்கிறார்.அப்போது பிரதமர் மோடியை நேரில் சந்திக்க முதல்வர் ஸ்டாலின் நேரம் கேட்டு தற்போது கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். மேலும் தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதல்வர் ஸ்டாலின் நேரம் கேட்டு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.