
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் ஐந்தாம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிர் வீட்டில் வசிக்கும் ஆட்டோ டிரைவரான கருப்பசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் காணாமல் போன நிலையில் அருகில் இருக்கும் வீட்டுமாடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஆட்டோ டிரைவர் கருப்பசாமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.