
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இருப்பினும் இந்தியா வலுவான S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் முயற்சிகளை தகர்த்து எறிந்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து நேற்று இரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதை இந்தியா தனது பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தகர்த்தெறிந்தது.
நேற்று மாலை இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தாக்குதல் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் இன்றும் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கலாம் என இந்தியாவின் மேற்கு எல்லையில் உள்ள கமாண்டர்களுக்கு தலைமை தளபதி உபேந்திரா திவேதி உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கதாகும்.