
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகிற அக்டோபர் 27 இல் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு அனுமதி வேண்டிய விழுப்புரம் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் விண்ணப்பித்தனர். முதலில் 33 நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு காவல் துறையினர் அனுமதி வழங்கிய நிலையில் காவல்துறையினர் கேட்டு அனைத்து கேள்விகளுக்கும் கட்சியினர் பதில் வழங்கினார். இதைத்தொடர்ந்து மாநாட்டுக்கான முதல் கட்ட பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் மாநாடு நடைபெறும் தேதி தள்ளி இதனால் மீண்டும் அனுமதி கேட்டு கட்சியினர் விண்ணப்பித்திரிந்த நிலையில் தற்போது காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
அதன்படி விக்கிரவாண்டி காவல்துறை கண்காணிப்பாளர் நந்தகுமார் அனுமதி கொடுத்துள்ள நிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள 33 நிபந்தனைகளில் 22 நிபந்தனைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்படி போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது, குடிநீர் வசதி, கழிவறை வசதி மற்றும் சிசிடிவி கேமராக்களை பொருத்துதல் உள்ளிட்ட 17 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி சாலை என்ற பகுதியில் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த மாநாட்டில் 50 ஆயிரத்து 500 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.