தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டுக்கு விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் அனுமதி கேட்டுள்ளனர். தற்போது விக்கிரவாண்டியில் சுவர் விளம்பரங்கள் செய்யும் பணிகளில் கட்சியினர் மும்மரமாக ஈடுபட்டுள்ள நிலையில் முதல் கட்ட ஆயத்த பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் 50 ஆயிரத்து 500 பேர் வரை கலந்து கொள்வதாக கூறப்படும் நிலையில் நாளை சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

அதன்படி கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள், அணி தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது முதல் மாநாட்டை நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.