விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவன் தற்போது ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் விசிக கட்சிக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதன் காரணமாக தற்போது விசிக கட்சியின் மாவட்ட நிர்வாகம் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசியல் கட்சிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில்தான் அதிக மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது கட்சியின் மாவட்ட நிர்வாகங்கள் கலைக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் 3 வாரங்களில் முடிக்கப்பட உள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து 234 தொகுதிகளுக்கும் புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளிவந்துள்ளது.