
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பெண்களுக்கு இலவசமாக பேருந்து பயணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் மாநகர பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவச பயண சலுகையை பெறுகிறார்கள். இந்நிலையில் தற்போது அரசு போக்குவரத்து கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பெண்களுக்கு கூடுதலாக கட்டணமில்லா சுமை பயணச்சீட்டை வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.
அதன்படி மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள பெண்களுக்கு அவர்களுடைய உற்பத்தி பொருட்களை ஊக்குவிப்பதற்காக 100 கிலோமீட்டர் வரையிலான பேருந்துகளில் 25 கிலோ வரையிலான பொருட்களை இலவசமாக கொண்டு செல்லலாம். மேலும் இதற்காக இனி பெண்களுக்கு கட்டணமில்லா இலவச சுமை பயண சீட்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.