
டெல்லியில் பட்டாசு வெடிக்க பண்டிகை காலங்களில் மட்டும் தடை விதித்தால் போதாது. திருமணம், தேர்தல் நேரங்களிலும் பட்டாசு வெடிப்பதை ஏன் தடுக்க கூடாது? தற்போது ஜனவரி ஒன்றாம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை உள்ளது.
அதனை ஆண்டு முழுவதும் நீடிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். வருகிற 25-ஆம் தேதிக்குள் முடிவு எடுக்குமாறு டெல்லி அரசுக்கும், டெல்லி தலைநகர் பகுதி மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.