குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு ஆகஸ்ட் 25 கடைசி தேதி. செப்டம்பர் 9 அன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜெகதீஷ் தன்கர் பதவி விலகியதை அடித்து குடியரசு துணை தலைவர் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.