
ஆந்திர மாநிலம் சிம்மாச்சலத்தில் அப்பன்னசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் டிக்கெட் கவுண்டர் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அந்த பகுதியில் கனமழை பெய்த நிலையில் டிக்கெட் கவுண்டர் மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்பன்னசுவாமியை சந்தன காப்பு அலங்காரத்தில் தரிசனம் செய்வதற்காக, ரூ.300 தரிசன டிக்கெட் வாங்க பக்தர்கள் காத்திருந்த போது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
இது குறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆந்திரா அரசு சார்பில் 25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.