தேனி மாவட்ட அதிமுக நிர்வாகி குறிஞ்சி மணி கட்சியிலிருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார். அதாவது மீண்டும் அதிமுக ஒற்றுமையாக இணைந்தால் மட்டும் தான் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று குறிஞ்சி மணி வலியுறுத்தியுள்ள நிலையில் அதிமுக பிளவு பட்டு கிடப்பதால் வெற்றிக்கு வாய்ப்பில்லை என்று கூறி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இவர் தேனி மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணியின் செயலாளராக பதவி வகித்து வந்தார். தற்போது அவர் கட்சியில் இருந்து விலகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் கட்சிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மீண்டும் அதிமுக இணைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.