தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமையுமா? என பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, விஜய் எங்கள் வீட்டு பையன். இன்று நேற்று அல்ல. சிறுவயதிலிருந்தே விஜய் எங்க வீட்டு பையன் தான்.

இன்று தான் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். நடிகராவதற்கு முன்பிருந்த சின்ன வயதிலிருந்து விஜய் எங்கள் வீட்டு பையன் தான். நாங்க இருபது வருஷ கட்சி. எனவே கூட்டணி குறித்த கேள்வியை இப்போது கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய் கிட்ட தான் நீங்க கேட்கணும் என கூறியுள்ளார். விஜய் எங்கள் வீட்டு பையன். அவரது அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.