தெற்கு ரயில்வேயின் நிர்வாக நடவடிக்கைகளில் இந்தி மொழி பயன்பாட்டை கட்டாயமாக்கும் வகையில், புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில், தினசரி அலுவலக பணிகள், உத்தரவுகள், ஆவணங்கள், உள்ளறிக்கைகள் மற்றும் டிக்கெட் கவுன்ட்டர் சேவைகளில் இந்தி மொழி கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் சேவைகளில் ஆங்கிலத்துடன் இந்தியும் இணைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து பிரிவுகளின் தலைமை அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவை ரயில்வே மேலாண்மை அனுப்பியுள்ள நிலையில், தமிழ் மொழி முக்கியத்துவம் குறைவடையும் சந்தேகத்தால் தமிழர்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது.