
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையில் இதுவரை 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அவர் டெல்லியில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பகிர்ந்துள்ளார். ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட அமைப்புகளின் பயிற்சி முகாம்கள், ஏவுதளங்கள் உள்ளிட்டவை குறி வைத்து தாக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் இந்த ராணுவ நடவடிக்கை திட்டமிடப்பட்டதாகவும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடரும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கைகள் இந்தியாவின் தன்னிச்சையான பாதுகாப்பு உரிமையின் கீழ், விகிதாசார மற்றும் அளவுக்கேற்ப மேற்கொள்ளப்பட்டவை என்பதும், எல்லைப் பகுதிகளில் அதிகப்படியான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.