
சென்னை தலைமை செயலகத்தில் சட்டசபையில் நான்காவது நாள் அமர்வு தொடங்கியது. இந்த நிலையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் எப்போதும் போல அவரே அவையை வழி நடத்துகிறார்.
இந்த நிலையில் 4 ஆண்டுகளாக அரசு ஊழியர்களுக்கு எதுவும் செய்யவில்லை, போராட்டம் நடத்துகிறார்கள். திமுக ஆட்சி முடிவதற்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் எப்படி ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க முடியும்? அதிமுக ஆட்சியில் சரண்டர் விடுப்பு திருத்தப்பட்டது ஏன்? அரசு ஊழியர்கள் சரண்டர் விடுப்பு நடைமுறை அடுத்த ஆண்டு ஏன்? என செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஏர்போர்ட் அமைப்பது ஜீபூம்பா வேலையல்ல படிப்படியாக பணிகள் துவங்கும். அரசு ஊழியர்களை சிறையிலடைத்த ஆட்சி உங்கள் ஆட்சி. அதிமுக ஆட்சியில் சரண்டர் விடுப்பு திருத்தப்பட்டது ஏன்? என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.