தமிழக அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுவாக சில குறிப்பிட்ட நோய்களின் தாக்கத்தை அரசுக்கு முறையாக தெரிவித்து அறிக்கை அளிப்பது அவசியம். அந்த வகையில் தற்போது பாம்பு கடியையும் அறிவிக்கக்கூடிய நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழக முழுவதும் இனி அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் பாம்பு கடி தொடர்பாக சிகிச்சைக்கு வருபவர்களின் விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதன் மூலம் பாம்பு கடி தொடர்பான தரவுகளை ஆராய்ந்து பாம்பு கடிக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.