திரைப்படங்கள் ரிலீஸ் ஆன மூன்று நாட்களுக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம் கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. திரைப்படங்கள் ரிலீசான மூன்று நாட்களுக்கு சமூக வலைதளங்களில் விமர்சனம் வெளியிட தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.