நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தற்போது கரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி போலீசார் சீமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.