சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் போலீஸ் காவலில் உள்ள ஞான சேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு ஞானசேகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.