கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூரில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை மற்றும் பேக்கரிகளுக்கு வேன் மூலம் பால் விற்பனை செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முரளி என்பவரை வேன் டிரைவராக நியமித்துள்ளார். இந்நிலையில் முதலில் பால்வினியோகம் செய்வதற்காக வேனை எடுத்து புறப்பட்டார்.

அவர் அங்கலக்குறிச்சி ராமர் கோவில் வீதி அருகே சென்றபோது வேன் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் முரளி உடனடியாக கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் வேனில் பற்றி எரிந்த தேதி அணைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.