
ஓசூர் அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
ஓசூர் அடுத்த தமிழக மாநில எல்லையான ஜூஜூ வாடி பகுதியில் உள்ள அத்திப்பள்ளி சோதனை சாவடி அருகே உள்ள பாலாஜி பட்டாசு குடோனில் தமிழகத்தின் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த 10 நபர்கள், வாணியம்பாடி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் பட்டாசு கடையில் வேலை பார்த்து வந்திருக்கிறார்கள். இன்று பட்டாசு குடோனில் பட்டாசுக்களை இறக்கிய போது பட்டாசில் தீ பற்றியது. இதையடுத்து மளமளவென தீ பரவியது.
அங்கு வேலை பார்த்து வந்த 10க்கும் மேற்பட்டோர் வெளியே வந்திருக்கிறார்கள். மேலும் 20க்கும் மேற்பட்டோர்களின் சிலர் பின் வாசல் வழியாக தப்பிக்க மூன்ற நிலையில் தீ யானது மேலும் பரவியது பட்டாசு குடோன் முழுவதும் பரவி அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பட்டு குடோனில் சிக்கியவர்களை 3 மணியில் இருந்து தற்போதுவரை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களான 10 இளைஞர்கள் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.