திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நேமலூர் ஊராட்சியில் பழைய கழிவுகளில் இருந்து மூல பொருட்களை பிரித்தெடுக்கும் மறுசுழற்சி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குப்பை கழிவுகள் சுமார் 30 அடி உயரத்திற்கு மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் எதிர்பாராதவிதமாக குப்பை கழிவுகளில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்கள் குப்பை கழிவுகளில் தீ வைத்தனரா? அல்லது மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.