அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்து அதில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில் ட்ரம்ப் தனது அலுவலகத்தில் பதவி ஏற்புக்கு முன்னதாக புதிய வாசனை திரவியங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். டிரம்ப் இதனை தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவில் ட்ரம்ப் கூறியதாவது,”இதோ எனது புதிய வாசனை திரவியங்கள் மற்றும் கொலோன்கள். நான் அவற்றை “fight,fight,fight” என்றே அழைக்கிறேன்.
இந்த வாசனை திரவியங்கள் வலிமையினை வலியுறுத்தும் விதமாக பெரிய எழுத்துக்களில் “சண்டை” என்ற வார்த்தையை கொண்டுள்ளது. இவை அனைத்தும் மக்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டு இருந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு டிரம்ப் இந்த வார்த்தையை உபயோகித்ததாக கூறப்படுகிறது. இதையே தனது வாசனை திரவியங்களுக்கு வைத்துள்ளார்.