நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏலம் இன்று நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க வேண்டுமானால் 2 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

இந்த பட்டாசு கடைகளில் 1 முதல் 8 வரை உள்ள கடைகளுக்கு 2.25 லட்சமும், 9 முதல் 24 வரை உள்ள கடைகளுக்கு 4 லட்சமும், 26 முதல் 38 வரை உள்ள கடைகளுக்கு 5.60 லட்சமும், 42 முதல் 50 வரை உள்ள கடைகளுக்கு 3 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை முதல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்களுக்கு பட்டாசு விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஏலம் சென்னை அண்ணா சாலையில் உள்ள காமதேனு கூட்டுறவு வளாகத்தில் வைத்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.