இந்தியாவில் உள்ள வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட அளவு வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களை விட மூத்த குடிமக்களுக்கு அதிக அளவு வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ள நிலையில் யூனிட் ஸ்மால் பைனான்ஸ் வங்கி 1001 நாட்களில் முதிர்ச்சியடையும் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 9.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.

த்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி 2 முதல் 3 வருட காலக்கெடுவிற்கு முதிர்ச்சி அடையும் FD திட்டங்களுக்கு 9.10% வட்டி வழங்குகிறது.

ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி 9 சதவீதம் வரை மூத்த குடிமக்களுக்கான வட்டி வழங்குகிறது.

சூர்யோதாய் ஸ்மால் பைனான்ஸ் வங்கி இரண்டு முதல் மூன்று வருட FD திட்டங்களுக்கு 9.10% வட்டிவழங்குகிறது.

பின் கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கி 750 நாள்களில் முதிர்ச்சி அடையும் FD திட்டங்களுக்கு 9.21% வட்டி வழங்குகிறது.

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி 1095 நாட்கலில்  முதிர்ச்சி அடையும் FD திட்டங்களுக்கு 9% வட்டி

ESAF பைனான்ஸ் வங்கி 2 முதல் 3 வருடங்களுக்கும் குறைவான FD திட்டங்களுக்கு 9%  வட்டியை வழங்குகிறது.