ஈரோடு மாவட்டத்திலுள்ள விளாங்குட்டை பகுதியில் தவசியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் தவசியப்பன் தான் வளர்க்கும் 20 ஆடுகளை தோட்டத்தை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் மேய்த்து வருவது வழக்கம். சம்பவம் நடைபெற்ற அன்று தவசியப்பன் உள்ளிட்ட சிலர் விளாங்குட்டை அருகே இருக்கும் வனப்பகுதியில் ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது திடீரென வந்த ஒற்றை யானை தும்பிக்கையால் தவசியப்பனை தூக்கி வீசியது.

இதனை பார்த்ததும் அவருடன் வந்தவர்கள் யானை தாக்க வருவதற்குள் தகர டின்னில் அடித்து ஒலி எழுப்பி யானையை அங்கிருந்து விரட்டி அடித்தனர். இதுபற்றி அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தவசியப்பனை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.