அகமதாபாத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், ஆன்லைனில் ரூ8 லட்சங்களை தாண்டிய விஐபி டிக்கெட்டுகளின் அதிர்ச்சியூட்டும் விலையால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.  அகமதாபாத்தில் ஏற்கனவே உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு சாதாரணமாக ரூபாய் 7000 கட்டணம் நிர்ணயித்த தங்கும் விடுதிகள் தற்போது லட்சங்களில் தங்கள் விடுதிகளுக்கான கட்டணத் தொகையை நிர்ணயித்து பல மடங்கு லாபத்தை பார்த்து வருகின்றனர்.

அதேபோல விஐபி டிக்கெட்-களும் பல மடங்கு அதிகமாக அதிகபட்சம் ரூபாய் 8 லட்சம் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதையும் ரசிகர்கள் போட்டி போட்டு வாங்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.  சட்டத்திற்கு விரோதமாக பிளாக் டிக்கெட் விற்பனையை தடுப்பதற்கு அதிகாரிகள் ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.  அதே போல் அதீத தேவையை காரணமாக முன்னிறுத்தி,  இதுபோன்று நியாயமற்ற முறையில்  கொள்ளை லாபம்  சம்பாதிக்கும் இவர்கள் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.