
பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்று உள்ளார். அப்போது கோவிலில் வைத்து அவர் வீடியோ எடுத்துள்ளார். இதனால் அவர் மீது திருமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவரது வங்கி கணக்கு முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் வாசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக அவரது வழக்கறிஞர் பேட்டி அளித்துள்ளார்.