மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு 12 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி பெற்றோர் திட்டியதால் சம்பவ நாளில் வீட்டை விட்டு வெளியேறி ரயில்வே நிலையம் நோக்கி நடந்து சென்றார். இதனைப் பார்த்த ஒருவர் நைசாக பேசி சிறுமியை அங்கிருந்து அழைத்துச் சென்றார். ஒரு அறைக்கு  அவர் சிறுமியை அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அந்த நபரின் கூட்டாளிகள் நான்கு பேர் இருந்தனர். அவர்கள் ஐந்து பேரும் சேர்ந்து சிறுமியை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் சிறுமியை அழைத்து வந்து ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இறக்கிவிட்டு சென்றனர். அந்த சிறுமி வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் அங்குமிங்கும் அலைந்து கதறி அழுதார். இதைப் பார்த்த ரயில்வே காவல்துறையினர் சிறுமியிடம் விசாரிக்க நடந்த விவரங்கள் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் இரண்டு பேர் பிடிபட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி மற்றும் மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.