கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் தான் பாடகர் ஆங்கி ஸ்டோன்(63). இவர் கடந்த சனிக்கிழமை அன்று சென்ட்ரல் இன்டர்காலேஜியேட் சாம்பியன்ஷிப் கூடைப்பந்து விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொள்வதற்காக சென்றார். இந்நிலையில் அவர் மாண்ட்கோமெரி அருகே சென்று கொண்டிருந்தபோது அவரது சொகுசு காரின் மீது மற்றொரு சரக்கு வாகனம் மோதியது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருப்பினும் அவருடன் பயணித்த 7 பேர் உயிர்தப்பியதுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.