தமிழ் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனராக இருந்தவர் சம்பத்ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 1000 மேற்பட்ட பாடல்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். தமிழில் நடிகர் அஜித் நடித்த அமராவதி மற்றும் காதல் கோட்டை போன்ற படங்களில் சம்பத்ராஜ் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

நடன இயக்குனர் சம்பத்ராஜுக்கு தற்போது 54 வயது ஆகும் நிலையில் சிறுநீரக பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நடன இயக்குனர் சம்பத்ராஜ் உயிரிழந்தார். மேலும் சம்பத்ராஜ் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.