
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்களில் முக்கியமானவர் ஆலியா பட். இவர் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் பட்டியின் மகளும் ஆவார். இவர் கங்குபாய் கதியவாடி, RRR போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்புத் திறனை காட்டி தனக்கென ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார்.
இதனை அடுத்து கடந்த 2202 ஆம் ஆண்டு ஆலியா பட் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ஆலியா பட் தனது பெயரை ஆலியா பட் கபூர் என்று மாற்றி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் கணவர் மீது அதிக அதிகமான அன்பை வைத்திருக்கிறார் என்று காட்டுவதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.