
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கள்ளம்பாளையம் பகுதியில் டெய்லர் சுரேஷ்குமார்(44) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோ ஆதித்யா(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி பிளஸ் 1 தேர்வு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.
இதில் மனோ 2 பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.